தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் குரூப் 4 தேர்வின் மூலம் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- கிராம நிர்வாக அலுவலர் (VAO),
- இளநிலை உதவியாளர்,
- தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாதம் 2025-ம் ஆண்டுக்கான குரூப் 4 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தாண்டு 3,935 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
முக்கிய நாட்கள் | விவரம் முக்கிய நாட்கள் |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 25.04.2025 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 24.05.2025 |
விண்ணப்பம் திருத்தம் | 29.05.2025 முதல் 31.05.2025 |
தேர்வு தேதி | 12.07.2025 |
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2025 (TNPSC GROUP 4 )
தமிழ்நாடு அமைச்சுப் பணி, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், வனத் தோட்டக்கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், வன சார்நிலை பணி, வன தோட்டக் கழகம் உள்ளிட்ட துறைகளின் கீழ் இருக்கும், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலைல் உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியளர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வில் இடம்பெறுகிறது.
வயது வரம்பு
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 42 வரை இருக்க வேண்டும்.
வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.
Category | Maximum age | Minimum Age |
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs and Destitute Widows of all Castes. | 42 years | 21 years |
Others | 32 years | 21 years |
கல்வித்தகுதி
குறைந்தபட்ச பொதுக் கல்வி தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு பட்டப்படிப்பு அவசியம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்காக இத்தேர்வை எழுதலாம். அதே போன்று, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு 10ஆம் வகுப்புடன் அதற்கான தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வனக் காப்பாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வானக் காவலர் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
தேர்வு முறை
குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வாகும். அதனைத்தொடர்ந்து, கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிப்படுவார்கள். தொடர்ந்து, நேரடி சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு தேதியின் மாற்றம்
டிஎன்பிஎஸ்சி 2025-ம் ஆண்டு திட்ட அட்டவணையின்படி, 13.07.2025 அன்று நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது, 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் ஒடிஆர் பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். இன்று (ஏப்ரல் 25) ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தில் உள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
Events | Dates |
TNPSC Group 4 Notification 2025 | April 25, 2025 |
TNPSC Group 4 2025 Registration date | April 25, 2025 |
Last day to fill the TNPSC Group 4 2025 application form | May 24, 2025 |
Last day to pay TNPSC Group 4 2025 fee | May 24, 2025 |
TNPSC Group 4 hall ticket 2025 release date | To be announced |
TNPSC Group 4 2025 exam date | July 12, 2025 |
TNPSC Group 4 Answer Key 2025 | To be announced |
TNPSC Group 4 Result 2025 | To be announced |