TNPSC ANSWER KEY

Search
current-affairs-june-month-2024

TNPSC Current Affairs-June 2024

Facebook
Telegram
WhatsApp
LinkedIn
 • டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற WAN-IFRA 2024 எண்ணிம ஊடக விருதுகளில், தி இந்து நிறுவனத்தின் ‘Made of Chennai’ என்ற பிரச்சாரமானது ‘சிறந்த பார்வையாளர் ஈடுபாடு’ பிரிவில் விருதினை வென்றது.
 • சென்னையில் உலக விளையாட்டு நகரத்தினை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் முதல் பல் மாதிரி தளவாடப் பூங்காவினை சென்னைக்கு அருகில் உள்ள மப்பேடு என்ற இடத்தில் அமைக்க உள்ளது.
 • தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது, மத்திய உள்துறை அமைச்சகத்துடன், சஞ்சார் சாதி முன்னெடுப்பின் கீழ் மோசடி குறுஞ்செய்தி மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
 • இந்தியப் பெண் அமைதிப்படை வீராங்கனை மேஜர் ராதிகா சென், ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்புமிக்க 2023 ஆம் ஆண்டு இராணுவப் பாலின ஆதரவாளர் விருதை பெற்றுள்ளார்.
 • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது இந்தியாவின் முதல் குவாண்டம் வைர நுண் சில்லுகள் பதிவுக் கருவியினை உருவாக்குவதற்காக டாடா ஆலோசனை சேவைகள் வழங்கீட்டு நிறுவனத்துடன் ஓர் உத்திசார் கூட்டாண்மையில் ஈடுபட்டுள்ளது.
 • இந்திய மலையேறும் வீரரான சத்யதீப் குப்தா ஒரு பருவத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் மற்றும் லோட்சே மலைச் சிகரத்தில் ஏறிய முதல் நபர் என்ற ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 11 மணி நேரம் 15 நிமிடங்களில் லோட்சே மலையை அடைந்த முதல் இந்தியர் என்றச் சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.

நான்காவது சர்வதேச வளர்ந்து வரும் சிறு தீவு நாடுகள் (SIDS4) மாநாடானது ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் செயின்ட் ஜான்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு: “Charting the course toward resilient prosperity” என்பது ஆகும்

புதுமைப் பெண் திட்டங்களின் தாக்கம்

 • புதுமைப் பெண்கள் திட்டத்தினால் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை சதவீதம் 34% அதிகரித்துள்ளது.
 • மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
 • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் சுமார் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்

இந்திய அரசியலமைப்பின் 329(b)வது சட்டப்பிரிவு

329 Bar Interferener by courts in electoral matters. Notwithstanding anything in this Constitution
(a) the validity of any law relating to the delimitation of constituencies of the allotment of seats to such constituencies, made under or purporting to be made under article 327 or article 328, shall not be called in question in any court,
(b) no election to either House of Puriament or to the House of either House of the Legislature of Save shall be called in question except by an election petition presented to such authority and in such manner as may be provided for by or under any law made by the appropriate Legislature.
329A. [Special provision as te elections to Parliment in the case of Prime Minister und Speaker, Rep by the Corvention (Forry-fourth Amόnear) Act, 1978, 36 ( 210-6-1979)

  • அரசு ஊழியர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னரே தேர்தலில் போட்டியிட முடியும் என தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்திருந்தார். உயர் நீதிமன்றம் தகுதி அடிப்படையில் இந்த வழக்கு குறித்து முடிவு செய்வதைத் தவிர்த்தது.
  • அரசியலமைப்பின் 329(b)வது சட்டப்பிரிவானது, தேர்தல் செயல்முறையின் இடையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் நீதித் துறையானது தலையிடுவதைத் தடை செய்கிறது.
  • 1952 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று, 329வது சட்டப்பிரிவை ஆராய்ந்து, வேட்பு மனு நிராகரிப்பு உத்தரவில் தலையிடுவதற்காக உயர் நீதிமன்றங்களோ அல்லது உச்ச நீதிமன்றமோ தங்கள் நீதிப் பேராணை அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்தது.
  • 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RPA), 100வது பிரிவு, ஒரு வேட்புமனுவை முறையற்ற முறையில் நிராகரிப்பதை ஒரு தேர்தலைச் செல்லாது என்று அறிவிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக பட்டியலிடுகிறது.
  • தேர்தலில் போட்டியிடும் உரிமை ஒரு குடிமை உரிமை அல்ல, மாறாக ஒரு சட்டம் அல்லது சிறப்புச் சட்டத்தின் ஓர் அம்சம் மட்டுமே ஆகும்.
   அத்தகைய உரிமையானது, சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட முக்கிய வரம்புகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.

  நிலச்சரிவு – பப்புவா நியூ கினியா

  • சமீபத்தில் பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் மாபெரும் நிலச்சரிவானது ஏற்பட்டது.
  • எங்கா மாகாணத்தின் ஒரு தொலைதூரப் பகுதியில் இந்தப் பேரழிவு நிகழ்ந்தது.
  • இந்தப் பேரழிவு காரணமாக சுமார் ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • புவியீர்ப்பு விசையின் இழுப்பு ஒரு மலை அல்லது குன்றின் சரிவை உருவாக்கும் புவி கட்டமைப்பு மூலப்பொருளின் வலிமையை மீறும் போது நிலச்சரிவுகள் ஏற்படச் செய்கின்றன.
  • புவிக் கட்டமைப்புப் பொருட்கள் என்பவை பாறைகள், மணல், வண்டல் மற்றும் களிமண் போன்ற பல்வேறு வகைகளாக இருக்கலாம்.
  • பெரும்பாலான இயற்கை நிலச்சரிவுகள் ஆனது நிலநடுக்கங்கள் அல்லது மழைப் பொழிவு அல்லது இரண்டும் இணைந்து ஏற்படுவதால் தூண்டப்படுகின்றன.
  • பப்புவா மற்றும் நியூ கினியா புவியின் மிகவும் ஈரமான இடங்களில் ஒன்றாகும்.

  மதிப்பு பணவீக்கக் குறியீடு 2023/24

  • 2024-25 ஆம் நிதியாண்டிற்கான மதிப்பு பணவீக்கக் குறியீடு (CII) ஆனது 363 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டில் இது 348 ஆகவும், 2022-23 ஆம் நிதியாண்டில் 331 ஆகவும் இருந்தது இது 4.3 சதவீத உயர்வைக் காட்டுகிறது.
  • மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இந்தக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
  • Cil என்பது பணவீக்கத்தினை அதாவது, பல ஆண்டுகளாக ஒரு பொருள் அல்லது சேவையின் விலையில் பதிவான மதிப்பிடப்பட்ட அதிகரிப்பினை கணக்கிடச் செய்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
  • பணவீக்கத்தின் விளைவை நன்கு பிரதிபலிக்கும் வகையில் முதலீட்டின் கொள்முதல் விலையை ஈடு செய்ய இந்தக் குறியீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
  • அதிக கொள்முதல் விலை என்பது குறைந்த இலாபம், அதாவது குறைந்த வரியாகும்.

  இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னெடுப்புகள்

  RBI GOVERNOR SHAKTIKANTA DAS LAUNCHES 3 MAJOR INITIATIVES OF THE RBI TODAY
  RBI Launches PRAVAAH, RBI Retail Direct Mobile Application & FinTech Repository
  PRAVAAH Portal To Make It Convenient For Any Individual/Entity To Apply Online For Various Regulatory Approvals in A Seamless Manner

  • PRAVAAH Portal Will Also Enhance the Efficiency Of Processes Related To Granting Regulatory Approvals/Clearances By the RBI
   Retail Direct Mobile App To Provide Retail Investors Easy Access To Retail Direct Platform, Provide Ease Of Transacting in GSecs
   Fintech Repository Will Contain Information On Rich Repository Of Data On Indian FinTech Firms For A Better Understanding Of The Sector From A Regulatory Perspective

  இந்திய ரிசர்வ் வங்கியானது PRAVAAH இணைய தளம், retail direct கைபேசி செயலி மற்றும் நிதித் தொழில்நுட்பக் களஞ்சியம் ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்த மூன்று முன்னெடுப்புகளும் முறையே 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்டன.
  • PRAVAAH என்பது எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் அங்கீகாரம் பெறுவதற்கு பாதுகாப்பான மற்றும் மையப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான இணைய தளமாகும்.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட retail direct திட்டம் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் நேரடி சில்லறை உயர் பாதுகாப்பு நிதிக் கணக்குகளை உருவாக்க retail direct தளம் உதவும்.
  • retail direct கைபேசிச் செயலி மூலம், சில்லறை முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி அரசுப் பத்திரங்களைக் கையாளலாம்.

  மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனை மாதிரி

  • நான்கு ஐரோப்பிய வங்கிகள் மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனை மாதிரியை அங்கீகரிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) கோரிக்கை விடுத்துள்ளன.
  • கிரெடிட் அக்ரிகோல், சொசைட்டி ஜெனரல், டாய்ச் வங்கி மற்றும் BNP பரிபாஸ் ஆகிய நிறுவனங்கள் தணிக்கை மேற்பார்வை உரிமைகள் தொடர்பாக தங்கள் நிறுவன அதிகாரிகளுக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே உள்ள பல தடைகளைத் தீர்க்க முயல்கின்றன.
  • 4 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஐரோப்பியப் பங்குகள் மற்றும் சந்தை ஆணையம் (ESMA) ஆனது இந்தியப் பங்கு வெளியீட்டுக் கழகத்தின் (CCIL) அங்கீகரித்ததை நீக்கியதிலிருந்து இந்திய அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பல்வேறு வகையீடுகளை வர்த்தகம் செய்வதில் ஐரோப்பிய வங்கிகள் பெரும் தடைகளை எதிர் கொள்கின்றன.
  • CCIL மீதான தணிக்கை மற்றும் ஆய்வு உரிமைகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி மறுத்ததன் விளைவாக ESMA ஆணையத்தின் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த உரிமைகள் உள்நாட்டு அரசாங்கப் பத்திர வர்த்தகத்தை மேற்பார்வையிடச் செய்வதோடு, அதற்கான தீர்வுகளை உறுதிப்படுத்துகின்றன

  நிலையான லித்தியம் அயனி மின் கலன்கள்

  • ஆராய்ச்சியாளர்கள் மலிவான, பாதுகாப்பான மற்றும் நிலையான மின் கலன்களை
  • உருவாக்க வழி வகுக்கும் வகையிலான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை
  • உருவாக்கியுள்ளனர்.
  • எளிதில் கிடைக்கப் பெறக் கூடிய மற்றும் மலிவான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • வழக்கமான வித்தியம்-அயனி மின் கலன்கள் உற்பத்தியானது கோபால்ட் மற்றும் நிக்கல் உலோகங்களை அதிகம் சார்ந்துள்ளது என்பதோடு இவை விலையுயர்ந்தவை மற்றும் எளிதில் கிடைக்கப் பெறாதவையாக உள்ளன.
  • புதிய பொருள் கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற விலையுயர்ந்த மற்றும் அரிதான உலோகங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையை முடிவுக்குக் கொண்டு வரும்.
  • இது மலிவான விலையில் மின்சார வாகனங்கள் (EVs) உற்பத்திக்கு வழிவகுக்கும்.

  கம்பளிப் புழுக்களின் மின்னேற்ற உணர்வு

  • பெரும்பாலான நில வாழ் விலங்குகளுக்கு இல்லாத ஆறாவது அறிவு என்பது கம்பளிப் புழுகளுக்கு உள்ளது.
  • அவை அதன் உடலில் உள்ள செட்டே எனப்படும் சிறிய முட்கள் மூலம் தங்களைச் சுற்றியுள்ள மின்சாரப் புலங்களை உணர்கின்றன என்ற வகையில் இது மின்னேற்ற உணர்வு எனப்படும்.
  • கணுக்காலிகளான கம்பளிப்புழுக்கள், அருகிலுள்ள தனது இரைப் பூச்சிகளை உணர மின்னேற்ற உள் உணர்வுகளைப் பயன்படுத்துகின்றன.
  • கம்பளிப் புழுக்களின் இழைகள் 50-350 ஹெர்ட்ஸ் அதிர்வெண்களுக்கு எதிர்வினை ஆற்றி, அச்சுறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல் இல்லாதவற்றை வேறுபடுத்தி அறிய உதவும்.

  புதைபடிவ மரத்தில் வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்கள்

  • சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள், பாந்தவ்கர் தேசிய பூங்கா மற்றும் புலிகள் வளங்காப்பகத்தில் இருந்து புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • பண்டைய காலத்தினைச் சேர்ந்த வேட்டையாடி உணவு உண்ட மக்கள் தங்கள் கருவிகள் மற்றும் கலைப்பொருட்களை உருவாக்க வேண்டி புதைபடிவமான மரத்தின் தண்டுகளை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தினர் என்று இந்தக் கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது.
  • அவை குறைந்தது சுமார் 10,000 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பு ஆனது மத்தியப் பிரதேசத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது
  • மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் அமைந்துள்ள குக்வா தேசிய புதை படிவப் பூங்கா 1983 ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக நிறுவப்பட்டது.
  • புதைபடிவமான மரத்தால் செய்யப்பட்ட கருவிகள் இந்தியாவில் அரிதானவை என்ற நிலையில் தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் என சில இடங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றன

  Leave a Comment

  Top Categories