TNPSC ANSWER KEY

Search

TNPSC Group 3 Question Paper and Answer Key 2023 | 28.01.2023 TNPSC Group 3 Exam Part A

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

TNPSC Group 3 Question Paper and Answer Key 2023 | 28.01.2023 TNPSC Group 3 Exam Tamil

பகுதி-அ (கட்டாய தமிழ் மொழித் தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு)

Part-A (Compulsory Tamil Eligibility-Cum-Scoring Test)

வினாக்கள் : 1-100

மொத்த மதிப்பெண்கள் : 150

Questions : 1-100

Total Marks : 150

பகுதி 2 GK (101 முதல் 200 வரை) பொது அறிவு விடைத்தாளை பார்க்க – க்ளிக்

 

1. “புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர்

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) புதுமைப்பித்தன்
(D) வாணிதாசன்
(E) விடை தெரியவில்லை

2. பாண்டிய நாடு ———- வளம் மிக்கது.

(A) பொன்
(B) முத்து
(C) இயற்கை
(D) நீர்
(E) விடை தெரியவில்லை

3. தமிழில் தோன்றிய முதல் நாடக நூல்

(A) சிலப்பதிகாரம்
(B) சீவகசிந்தாமணி
(C) மனோன்மணியம்
(D) மணிமேகலை
(E) விடை தெரியவில்லை

4. காவடிச்சிந்தின் ஆசிரியர்

(A) அண்ணாமலையார்
(B) அதிவீரராமர்
(C) அருணகிரியார்
(D) குமரகுருபரர்
(E) விடை தெரியவில்லை

5. கம்பர் அவைப்புலவராக விளங்கிய அரசவை

(A) பாண்டியன்
(B) குலோத்துங்க சோழன்
(C) சேரன்
(D) பல்லவன்
(E) விடை தெரியவில்லை

6. தமிழுக்குக் ‘கதி’ என்று போற்றப்படும் நூல்கள் எவை?

(A) கம்பராமாயணமும் திருக்குறளும்
(B) திருக்குறளும் திரிகடுகமும்
(C) சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
(D) சிலப்பதிகாரமும் சீவகசிந்தாமணியும்
(E) விடை தெரியவில்லை

7. கூற்று 1: கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.

கூற்று 2 : அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.

(A) கூற்று 1 மட்டும் சரி
(B) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
(C) கூற்று 2 மட்டும் சரி
(D) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
(E) விடை தெரியவில்லை

8. ‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக.

(A) மறைந்த
(B) குறைந்த
(C) மிகுந்த
(D) விழுந்த
(E) விடை தெரியவில்லை

9. சார்பெழுத்து வகைக்கு —— பொருந்தாது.

(A) உயிர்மெய்
(B) ஆய்தம்
(C) உயிர் எழுத்து
(D) ஆய்தக்குறுக்கம்
(E) விடை தெரியவில்லை

10. பின்வருவனவற்றுள் தாராபாரதி எழுதாத நூல்

(A) இருண்ட வீடு
(B) புதிய விடியல்கள்
(C) இது எங்கள் கிழக்கு
(D) விரல் நுனி வெளிச்சங்கள்
(E) விடை தெரியவில்லை

11. மரபுப் பிழை நீக்கிய சொல்லைக் காண்க.

(A) களிமயில் கத்தும்
(B) கிளி கீச்சிடும்
(C) கருங்குயில் கூவும்
(D) யானை பாடும்
(E) விடை தெரியவில்லை

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

I. சீருடை
II. சால்பு
III. சிலந்தி

(A) III, II, I
(B) II, III, I
(C) I, III, II
(D) III, I, II
(E) விடை தெரியவில்லை

13. சரியான அகர வரிசையைத் தேர்க.

கீற்று, கேணி, காக்கை, கூந்தல்

(A) காக்கை, கீற்று, கூந்தல், கேணி
(B) கீற்று, கூந்தல், கேணி, காக்கை
(C) கூந்தல், கீற்று, காக்கை, கேணி
(D) கேணி, காக்கை, கூந்தல், கீற்று
(E) விடை தெரியவில்லை

14. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்
(E) விடை தெரியவில்லை

15. “மழைமுகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) செழிப்பு – இன்பம்
(B) வறட்சி வாட்டம், துன்பம்
(C) மகிழ்ச்சி – மிகுந்த இன்பம்
(D) மழை – வெயில்
(E) விடை தெரியவில்லை

16. “பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்
(B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது
(C) பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்
(D) பயனற்ற செயல், பயனற்ற நன்மை
(E) விடை தெரியவில்லை

17. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” – இக்குறளில் அமைந்துள்ள நயத்தைத் தேர்ந்தெடு.

(A) மோனை
(B) இயைபு
(C) எதுகை
(D) எதுவுமில்லை
(E) விடை தெரியவில்லை

18. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இக்குறட்பாவில் அமைந்துள்ள தொடை நயத்தை தேர்ந்தெழுதுக.

(A) அடியளபெடைத்தொடை
(B) இரட்டைத்தொடை
(C) அந்தாதித்தொடை
(D) முரண்தொடை
(E) விடை தெரியவில்லை

19. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகள் உணர்த்தும் பண்பு

(A) அன்பு
(B) மகிழ்ச்சி
(C) உலகப் பொதுமை
(D) ஒப்புரவு
(E) விடை தெரியவில்லை

20. நாயக்கர்கள் ஆண்ட நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது?

(A) பாளையம்
(B) பாடி
(C) பட்டினம்
(D) பாக்கம்
(E) விடை தெரியவில்லை

21. பழங்காலத்தில் கடற்கரைகளில் உருவான பேரூர்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?

(A) பட்டினம்
(B) பாக்கம்
(C) குப்பம்
(D) கீழக்கரை
(E) விடை தெரியவில்லை

22. ‘தலைவர்களை உருவாக்குபவர்’ – என அழைக்கப்பட்டவர் யார்?

(A) எம்.ஜி.ஆர்
(B) காமராசர்
(D) பேரறிஞர் அண்ணா
(C) இந்திராகாந்தி
(E) விடை தெரியவில்லை

23. பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர் யார்?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) பெரியார்
(D) அறிஞர் அண்ணா
(E) விடை தெரியவில்லை

24. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?

(A) சதுரகராதி
(B) பேரகராதி
(C) அரும்பத அகராதி
(D) தமிழ்-இலத்தீன் அகராதி
(E) விடை தெரியவில்லை

TNPSC Group 3 Question Paper and Answer Key 2023 | 28.01.2023 TNPSC Group 3 Exam

25.சரியானதைக் கண்டறிக.

I. தேவநேயப்பாவாணர் – அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்
II. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
III. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி இயக்குநராக இருந்தார்
IV. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் தலைவராக இருந்தார்

(A) I மற்றும் II
(B) I, II, III மட்டும்
(C) III மற்றும் IV
(D) அனைத்தும் சரி
(E) விடை தெரியவில்லை

26. கண்ணீர்ப்பூக்கள் – கவிதைத் தொகுப்பை இயற்றியவர்

(A) மு.மேத்தா
(B) முடியரசன்
(C) அப்துல்ரகுமான்
(D) கண்ணதாசன்
(E) விடை தெரியவில்லை

27. தவறான இணைகளைத் தேர்ந்தெடு

ஆசிரியர் ➨ பணியாற்றிய இதழ்கள்

I. ந.பிச்சமூர்த்தி ➨ அன்னம் விடு தூது
II. பாரதியார் ➨ இந்தியா, விஜயா
III. பெருஞ்சித்திரனார் ➨ தென்மொழி, தமிழ்ச்சிட்டு
IV. மீ. இராசேந்திரன் ➨ நவ இந்தியா, ஹனுமான்

(A) IIம் IVம்
(B) Iம் IVம்
(C) Iம் IIம்
(D) IIம் IIIம்
(E) விடை தெரியவில்லை

28. இயேசு காவியம் – பாடியவர்

(A) வீரமாமுனிவர்
(B) ஜி.யு. போப்
(C) கண்ணதாசன்
(D) பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை

29. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

(A) முத்தையா
(B) இராமையா
(C) சுப்பையா
(D) கண்ணய்யா
(E) விடை தெரியவில்லை

30. சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது?

(A) பாண்டியன் பரிசு
(B) பிசிராந்தையார் நாடகம்
(C) குடும்ப விளக்கு
(D) பூங்கொடி நாடகம்
(E) விடை தெரியவில்லை

31. தமிழகத்தில் இரசவாதிகள் என்று கருதப்படுபவர்கள்

(A) மன்னர்கள்
(B) புலவர்கள்
(C) சித்தர்கள்
(D) வள்ளல்கள்
(E) விடை தெரியவில்லை

32. காளமேகப் புலவரின் இயற்பெயர் யாது?

(A) பரதன்
(B) வரதன்
(C) இனியன்
(D) கனியன்
(E) விடை தெரியவில்லை

33. “சினமான தீயறிவைப் புகைத்தலாலே
திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்”
– இப்பாடல் அடியில் வரும் திரிலோக நாயகன்

(A) தருமன்
(B) அருச்சுனன்
(C) சகாதேவன்
(D) வீமன்
(E) விடை தெரியவில்லை

34. மாகால் – இச்சொல்லிற்கான இலக்கணக் குறிப்பினை எழுதுக.

(A) உரிச்சொல் தொடர்
(B) இடைச்சொல் தொடர்
(C) அடுக்குத் தொடர்
(D) வினையாலணையும் பெயர்
(E) விடை தெரியவில்லை

35. குறுந்தொகை நூல்

I. 401 பாடல்களை உடையது
II. தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்

(A) ‘I’ தவறு ‘II’ சரி
(B) ‘I’, ‘II’ இரண்டும் சரி
(C) ‘I’ சரி ‘II’ தவறு
(D) I’, ‘II’ ஆகிய இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை

36. பொருந்தாத இணையைக் காண்க.

I. நசை – விருப்பம்
II. பிடி – ஆண் யானை
III. யா – ஒரு வகை மரம்
IV. பொளிக்கும் – உரிக்கும்

(A) I மற்றும் II
(B) II மற்றும் III
(C) III மற்றும் IV
(D) II மட்டும்
(E) விடை தெரியவில்லை

37. பொருத்தி விடை தேர்க

(a) அவன் அவள் அவர்                1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
(b) நாங்கள் முயற்சி செய்வோம் 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
(c) நாம் முயற்சி செய்வோம்       3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
(d) நாங்கள், நாம்                       4. பதிலிடு பெயர்கள்

  (a) (b) (c) (d)

(A) 4 1 2 3
(B) 2 3 4 1
(C) 3 4 1 2
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை

38. பாசிலை – பிரித்தெழுதுக

(A) பசுமை + இலை
(B) பச்சை + இலை
(C) பாசு + சிலை
(D) பா + சிலை
(E) விடை தெரியவில்லை

39. ‘அருந்துணை’ என்பதை பிரித்தெழுதுக.

(A) அருமை + துணை
(B) அரு + துணை
(C) அருந் + துணை
(D) அரு + இணை
(E) விடை தெரியவில்லை

40. பழையன கழிதலும் —- புகுதலும்.

(A) புதியன
(B) புதுமை
(C) புதிய
(D) புதுமையான
(E) விடை தெரியவில்லை

41. ‘நிறுத்தல்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

(A) நிறுத்து
(B) நீறு
(C) நின்று
(D) நிறுவு
(E) விடை தெரியவில்லை

42. ‘மயங்கிய’ சரியான வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.

(A) மயங்கினான்
(B) மயங்கிய
(C) மயங்கு
(D) மயங்கினாள்
(E) விடை தெரியவில்லை

43. ‘சூழ்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

(A) சூழ்வார்
(B) சூழ்ந்த
(C) சூழ்ந்து
(D) சூழ்தல்
(E) விடை தெரியவில்லை

44. ‘நட’ என்ற வேர்ச்சொல்லின் தொழில் பெயரை அறிக.

(A) நடந்து
(B) நடத்தல்
(C) நடந்த
(D) நடந்தான்
(E) விடை தெரியவில்லை

45. தொடர்களில் பொருத்தமானவற்றை எழுதுக.

I. உணர்ச்சித் தொடர் – பார்க்க வந்தான்
II. வினாத் தொடர் – கேட்டவன் யார்?
III. கட்டளைத் தொடர் – தண்டனை கொடுங்கள்
IV. பிறவினைத் தொடர் – ஆ! எவ்வளவு உயரமான மரம்!

(A) I, II
(B) I, IV
(C) II, III
(D) III, IV
(E) விடை தெரியவில்லை

46. எவ்வகை வாக்கியம் என அறிக.

பந்து உருண்டது – என்பது எவ்வகை வாக்கியம் என அறிக.

(A) தன்வினை வாக்கியம்
(B) செய்தி வாக்கியம்
(C) பிறவினை வாக்கியம்
(D) உடன்பாட்டு வாக்கியம்
(E) விடை தெரியவில்லை

47. பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

I.  உருட்டினான்
II. பயின்றான்
III. பயிற்றுவித்தான்
IV. ஆடினாள்

(A) I, III
(B) I
(C) I, II
(D) II
(E) விடை தெரியவில்லை

48. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். – இது எவ்வகை வாக்கியம்?

(A) செய்வினை
(B) செயப்பாட்டு வினை
(C) தன் வினை
(D) பிற வினை
(E) விடை தெரியவில்லை

49. “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர்சூட்டி வள்ளியம்மையைப் பெருமைப்படுத்திய கூட்டுறவுச் சங்கம் எது?

(A) தமிழ்நாடு வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்
(B) தமிழ்நாடு விசைத்தறி கூட்டுறவுச் சங்கம்
(C) தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்
(D) தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்
(E) விடை தெரியவில்லை

50. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

(A) மூவலூர் இராமாமிர்தம்
(B) இராஜேஸ்வரி அம்மையார்
(C) அஞ்சலையம்மாள்
(D) அம்புஜத்தம்மாள்
(E) விடை தெரியவில்லை

TNPSC Group 3 Question Paper and Answer Key 2023 | 28.01.2023 TNPSC Group 3 Exam

Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023

 

51. “வறிது நிலைஇய காயமும்” என வானத்தில் காற்றில்லா பகுதியைக் கூறும் நூல்

(A) பதிற்றுப்பத்து
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) கலித்தொகை
(E) விடை தெரியவில்லை
.
52. “உறுமிடத்துதவா உவர்நிலம்” என நிலத்தின் தன்மையைக் கூறும் நூல்

(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) குறுந்தொகை
(D) கலித்தொகை
(E) விடை தெரியவில்லை

53. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றவர் யார்?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) ஒளவையார்
(D) கபிலர்
(E) விடை தெரியவில்லை

54. ”ஆதி சித்தராகக்” கருதப்படுபவர் யார்?

(A) திருமூலர்
(B) அகத்தியர்
(C) இடைக்காடர்
(D) கோரக்கர்
(E) விடை தெரியவில்லை

55. நூல்கள் – நூலாசிரியர்கள் – பொருத்துக.

(a) காற்றிலே மிதந்த கவிதை 1.அன்னகாமு
(b) ஏட்டில் எழுதாக் கவிதை   2.கருணானந்த சுவாமிகள்
(c) பவளக்கொடி மாலை        3.கி.வா.ஜகந்நாதன்
(d) நாடோடி இலக்கியம்        4.மு. அருணாசலம்

(a) (b) (c) (d)

(A) 3 4 1 2
(B) 1 2 3 4
(C) 2 3 4 1
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை

56. நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்

(A) வானமாமலை
(B) மு.இராமசாமி
(C) சு. சக்திவேல்
(D) அன்னகாமு
(E) விடை தெரியவில்லை

57. சிலப்பதிகாரத்தில் இல்லாத காண்டம்

I. ஆரண்ய காண்டம்
II. புகார்க் காண்டம்
III. மதுரைக் காண்டம்
IV. வஞ்சிக் காண்டம்

(A) I-சரி
(B) II, III – சரி
(C) III, IV – சரி
(D) I, II, III – சரி
(E) விடை தெரியவில்லை

58. சரியான இணையைத் தேர்வு செய்க.

இரட்டை காப்பியங்கள் என்பது

(A) சிலப்பதிகாரம் – மணிமேகலை
(B) மணிமேகலை – சீவக சிந்தாமணி
(C) சீவக சிந்தாமணி – வளையாபதி
(D) வளையாபதி – சிலப்பதிகாரம்
(E) விடை தெரியவில்லை

59. நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவகசிந்தாமணி
(D) குண்டலகேசி
(E) விடை தெரியவில்லை

TNPSC Group 3 Question Paper and Answer Key 2023 | 28.01.2023 TNPSC Group 3 Exam

60. ‘புறந்தூய்மை நீரான் அமையும்’ அகந்தூய்மை —–காணப்படும்.

(A) நீரால்
(B) காற்றால்
(C) வாய்மையால்
(D) பொய்மையால்
(E) விடை தெரியவில்லை

61. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்

(A) திருவாசகம்
(B) திருக்குறள்
(C) திரிகடுகம்
(D) திருப்பாவை
(E) விடை தெரியவில்லை

62. வழிப்பறி, நிரைகவர்தல் ஆகியன —– திணைக்குரிய தொழில்கள்.

(A) முல்லை
(B) பாலை
(C) நெய்தல்
(D) மருதம்
(E) விடை தெரியவில்லை

63. கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் படைப்புகளை மட்டும் தேர்வு செய்க.

(A) அழுத கண்ணீர், குருட்டு மேகங்கள், அண்ணபூரணி, நீயும்
(B) ஆனந்தத்தேன், மனசு தாங்காது, ஆலங்கட்டி, தெய்வமனசு
(C) வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை
(D) புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி
(E) விடை தெரியவில்லை

64. ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க.

       அலை ➨ அளை ➨ அழை

(A) கூப்பிடு ➨ கடல் அலை ➨ புற்று
(B) புற்று ➨ கூப்பிடு ➨ கடல் அலை
(C) கடல் அலை ➨ புற்று ➨ கூப்பிடு
(D) தேடு ➨ நீக்கு ➨ பிழை
(E) விடை தெரியவில்லை

65. ஓ – இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.

(A) மதில்மேல் நிற்கும் பூனை
(B) தனியே செல்லும் யானை
(C) மதகு நீர் தாங்கும் பலகை
(D) நல்லோர் வருகை
(E) விடை தெரியவில்லை

66. கோ – எனும் ஓரெழுத்தொருமொழியின் பொருள்.

(A) அகல்
(B) மதில்
(C) பலகை
(D) சிவிகை
(E) விடை தெரியவில்லை

67. “விட்டு விட்டு” – இலக்கண குறிப்பு வரைக.

(A) இரட்டைக்கிளவி
(B) அடுக்குத்தொடர்
(C) எண்ணும்மை
(D) ஒருபொருட் பன்மொழி
(E) விடை தெரியவில்லை

68. இலக்கணக்குறிப்பு – தவறான பொருத்தத்தை எழுதுக.

I. தாய் சேய் – உம்மைத்தொகை
II. முறுக்கு மீசை வந்தார் – வேற்றுமைத்தொகை
III. கரும்பு தின்றான் – அன்மொழித்தொகை
IV. வெண்குடை – பண்புத்தொகை

(A) II, III
(B) I, IV
(C) III, IV
(D) II, I
(E) விடை தெரியவில்லை

69. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மாறன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்

(A) மாறன் என்ன படிக்கிறான்?
(B) மாறன் படிப்பது யாது?
(C) மாறன் எத்தனையாவது வகுப்பு படிக்கிறான்?
(D) மாறன் எந்த வகுப்பில் படிக்கிறான்?
(E) விடை தெரியவில்லை

70. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மனிதர்கள் செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள் செய்கின்றன.

(A) மனிதர்களால் கடினமான செயல்களைச் செய்ய முடியுமா?
(B) மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்பவை எவை?
(C) மனிதர்கள் செய்ய இயலாத செயல்களை ரோபோக்கள் செய்யுமா?
(D) மனிதர்கள் கடினமான செயல்களைச் செய்வார்களா?
(E) விடை தெரியவில்லை

71. யாருக்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்?

(A) பசித்தபின் உண்பார்க்கு
(B) முன் உண்டது செரித்தபின் உண்பார்க்கு
(C) நீர் அருந்துபவருக்கு
(D) இவற்றில் எதுவும் இல்லை
(E) விடை தெரியவில்லை

72. உணவில் சேரும் சிறு நச்சுத்தன்மையை முறிக்கும் மூலிகை

(A) முருங்கைக்கீரை
(B) கறிவேப்பிலை
(C) தூதுவளை
(D) கற்றாழை
(E) விடை தெரியவில்லை

73. தொன்மைத் தமிழகத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்

(A) எகிப்தியர்
(B) கிரேக்கர்
(C) பாலஸ்தீனியர்
(D) சீனர்
(E) விடை தெரியவில்லை

74. தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்

(A) ந.மு.வேங்கடசாமி நாட்டார்
(B) உ.வே.சா.
(C) திரு.வி.க.
(D) பரிதிமாற்கலைஞர்
(E) விடை தெரியவில்லை

75. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்றவர்

(A) இலக்குவனார்
(B) மு.வரதராசனார்
(C) வையாபுரி
(D) வேதநாயகம் பிள்ளை
(E) விடை தெரியவில்லை

76. கூற்று: சமயத் துறையில் வடமொழி ஆதிக்கம் அதிகமிருந்தும் தமிழ் செல்வாக்கு
பெற்றிருந்தது.

காரணம்: ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திப் பாடல்களைத் தமிழிலே வழங்கினர்.

(A) காரணம்,கூற்று இரண்டும் சரி
(B) காரணம் சரி; கூற்று தவறு
(C) காரணம் தவறு; கூற்று சரி
(D) காரணம், கூற்று இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை

77. கூத்துப்பட்டறை எனும் நாடகக் குழுவை நடத்தி வந்தவர் யார்?

(A) கே.ஏ.குணசேகரன்
(B) முருகபூபதி
(C) ந.முத்துசாமி
(D) மு. ராமசாமி
(E) விடை தெரியவில்லை

78. “கிறித்துவர்களின் தேவாரம்” – என்றழைக்கப்படுவது

(A) இரட்சண்ய யாத்ரிகம்
(B) இரட்சண்ய குறள்
(C) இரட்சண்ய மனோகரம்
(D) இரட்சண்ய பால போதனை
(E) விடை தெரியவில்லை

79. முதலாழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் யார்?

(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) திருமழிசையாழ்வார்
(D) பொய்கையாழ்வார்
(E) விடை தெரியவில்லை

80. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?

(A) மூன்று
(B) ஆறு
(C) எட்டு
(D) பத்து
(E) விடை தெரியவில்லை

81. ‘திருவிளையாடற் புராணம்’ எனும் நூலை இயற்றியவர்?

(A) பரஞ்சோதி முனிவர்
(B) உமறுப்புலவர்
(C) சேக்கிழார்
(D) கச்சியப்ப சிவாச்சாரியர்
(E) விடை தெரியவில்லை

82. ‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கப்படுவது

(A) சீறாப்புராணம்
(B) கந்தபுராணம்
(C) திருவிளையாடற்புராணம்
(D) பெரியபுராணம்
(E) விடை தெரியவில்லை

83. பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர்

(A) பாரதியார்
(B) கம்பன்
(C) வள்ளலார்
(D) பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை

84. தேனினும் இனியத் தீந்தமிழ்ப் பனுவல்கள் 4000 பாடலைப் பாடியருளியவர்கள்

(A) அறுபத்து மூன்று நாயன்மார்கள்
(B) பதினெண் சித்தர்கள்
(C) பன்னிரு ஆழ்வார்கள்
(D) சங்க காலப் புலவர்கள்
(E) விடை தெரியவில்லை

85. ‘சிறுபஞ்சமூலம்’ – என்பதில் ‘பஞ்சமூலம்’, என்பது எதைக் குறிக்கிறது?

(A) மூன்று வேர்கள்
(B) ஐந்து வேர்கள்
(C) நான்கு வேர்கள்
(D) ஆறு வேர்கள்
(E) விடை தெரியவில்லை

86. ஒப்புரவு என்பதன் பொருள்

(A) அடக்கமுடையது
(B) பண்புடையது
(C) ஊருக்கு உதவுவது
(D) செல்வம் உடையது
(E) விடை தெரியவில்லை

87. கீழ்க்காணும் ‘வல்லினம் மிகா இடம்’ குறித்த கூற்றில் சரியான கூற்றை தேர்வு செய்க.

(A) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது
(B) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது
(C) வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
(D) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
(E) விடை தெரியவில்லை

88. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.

பொருத்துக.

(a) Storm      1. பெருங்காற்று
(b) Tornado   2. புயல்
(c) Tempest   3. சுழல் காற்று
(d) Whirl wind 4. சூறாவளி

(a) (b) (c) (d)

(A) 3 1 2 4
(B) 2 4 1 3
(C) 1 3 2 4
(D) 4 3 1 2
(E) விடை தெரியவில்லை

89. பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) Millets – சிறு தானியங்கள்
(B) Herbs – மூலிகை
(C) Antibiotic – நுண்ணுயிர் முறி
(D) Gene – பக்க விளைவு
(E) விடை தெரியவில்லை

90. சரியான வரிசை முறையில் சொற்கள் அமைந்துள்ள தொடரினைத் தேர்ந்தெடுக்க.

(A) கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு
(B) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு
(C) உதிக்கின்ற ஞாயிறு கிழக்கு திசைக்குப் பெயர்
(D) ஞாயிறு திசைக்குப் பெயர் கிழக்கு உதிக்கின்ற
(E) விடை தெரியவில்லை

91. கொடுக்கப்பட்ட சொற்களில் தொழில் பெயரை எழுதுக.

(A) படித்து
(B) படித்த
(C) படித்தல்
(D) படித்தார்
(E) விடை தெரியவில்லை

92. மார்கழி – பெயர்ச்சொல் வகையினைக் கண்டறிக.

(A) தொழில் பெயர்
(B) காலப் பெயர்
(C) பொருள் பெயர்
(D) சினைப் பெயர்
(E) விடை தெரியவில்லை

93. இறந்தவரைப் பற்றிப் பாடும் இசைக்கலை எது?

(A) கூத்துப்பாட்டு
(B) விறலிப்பாட்டு
(C) ஒப்பாரி
(D) காதல் பாட்டு
(E) விடை தெரியவில்லை

94. பொருத்துக

(a) சிவப்பு ரிக்க்ஷா    1. கு. அழகிரிசாமி
(b) சக்ரவாகம்           2. சிதம்பர சுப்பிரமணியம்
(c) ஜனனி                 3. லா.ச.ராமாமிருதம்
(d) திரிபுரம்              4. தி.ஜானகிராமன்

சரியான விடையைத் தெரிவு செய்க.

(a) (b) (c) (d)

(A) 4 2 1 3
(B) 1 4 3 2
(C) 4 2 3 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை

95. சரியானத் தொடர்களைத் தேர்ந்தெடு

I. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்
II. சமயச் சடங்குகளின் போதும் கோவில் திருவிழாக்களிலும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு
III. விலங்கு தோலினால் செய்து பலா மர பட்டையில் கட்டப்படும் கருவி திமிலை
IV. பறையை பாண்டில் எனவும் அழைப்பர்

(A) II மற்றும் III சரி
(B) I மற்றும் II சரி
(C) III மற்றும் IV சரி
(D) I மற்றும் IV சரி
(E) விடை தெரியவில்லை

96. தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருக்கவேண்டுமென விரும்பி யாருக்கு மு.வ.கடிதம் எழுதினார்?

(A) தம்பிக்கு
(B) அண்ணனுக்கு
(C) ஆட்சியாளருக்கு
(D) அமைச்சருக்கு
(E) விடை தெரியவில்லை

97. குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா – பழமொழிக்குரிய பொருள் எழுதுக.

(A) அனுபவம் மூலம் அறிதல்
(B) கவலையில்லாமல் இருத்தல்
(C) தன்னிலை உணர்தல்
(D) ஏமாற்றம் அடைதல்
(E) விடை தெரியவில்லை

98. பழமொழியை நிறைவு செய்க.

குடல் கூழுக்கு அழுவுதாம் ——-

(A) நினைச்சதாம் கழுதை எடுத்ததாம்
(B) கொண்டை பூவுக்கு அழுவுதாம்
(C) அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும்
(D) பதரு அரிசி ஆகுமா!
(E) விடை தெரியவில்லை

99. நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு.

(A) முனைவர் இரா. அரங்கநாதன்
(B) அண்ணல். அம்பேத்கர்
(C) அறிஞர். அண்ணா
(D) லாவோட்சு
(E) விடை தெரியவில்லை

100. தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறந்தது என்ற சிந்தனைக் கருத்தைக் கூறியவர்

(A) பேரறிஞர். அண்ணா
(B) தந்தை பெரியார்
(C) திரு.வி.க.
(D) பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை

பகுதி 2 GK (101 முதல் 200 வரை) பொது அறிவு விடைத்தாளை பார்க்க – க்ளிக்
Thanglish to Tamil Typing

Leave a Comment