தமிழ்நாடு
Group 1, 2 Mains
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் கொள்கை மற்றும் தூய எரிசக்தி பூங்கா துவக்கம்
Tamil Nadu launches Green Hydrogen & Ammonia Policy; Thoothukudi designated as Global Export Hub.
2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ₹1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஆண்டுக்கு 1 மில்லியன் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இலக்குடனும் தமிழ்நாடு அரசு விரிவான கொள்கையை அறிவித்துள்ளது.
முக்கிய தேர்வுத் தகவல்கள் (Exam Key Facts):
- ஏற்றுமதி மையம்: தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளாகத்தில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.
- ஒருங்கிணைப்பு முகமை: தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (Tamil Nadu Green Energy Corporation Limited - TNGECL).
- வரி சலுகை: மின்னாற்பகுப்பு (Electrolyzer) உற்பத்தி ஆலைகளுக்கு 10 ஆண்டுகள் 100% மின்கட்டண வரி விலக்கு.