SSLC Standard
200 Questions
300 Marks
TNPSC Group 4 & VAO அலகுவாரியான விரிவான பாடத்திட்டம்
கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist) மற்றும் சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பதவிகளுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ பாடத்திட்டம்.
பகுதி - 'அ': பொதுத்தமிழ் (100 வினாக்கள் - 150 மதிப்பெண்கள்)
கட்டாயத் தாள்பத்தாம் வகுப்புத் தரம் வரை சமச்சீர் கல்வி தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள பகுதிகள்.
பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர். தொடரும் தொடர்பும் அறிதல்: இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர், அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல். பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், சந்திப்பிழை நீக்குதல், வேர்ச்சொல் தேர்வு, அகரவரிசை.
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம், சிற்றிலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்.
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி, ஜி.யு. போப், வீரமாமுனிவர், பெரியார், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், காமராசர் சமுதாயத் தொண்டு.
பகுதி - 'ஆ': பொது அறிவு & திறனறிவு (100 வினாக்கள் - 150 மதிப்பெண்கள்)
75 GS + 25 Maths
இயற்பியல் விதிகள், அன்றாட வாழ்வில் வேதியியல் தனிமங்கள், அமிலங்கள் மற்றும் காரங்கள், தாவரவியல் & விலங்கியல் மனித உடலியல் மற்றும் சுற்றுச்சூழல்.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், கடமைகள், குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய-மாநில நிதி உறவுகள்.
சுருக்குதல், விழுக்காடு, மீ.பொ.வ, மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பளவு மற்றும் கனஅளவு, தர்க்க சிந்தனை புதிர்கள்.